மனதில் உறுதி வேண்டும்💪#shorts #shortsvideo #gardening #environment#motivation #nature#nizhalaithedi

Video ID: NR0m047Ee6s

YouTube URL: https://www.youtube.com/watch?v=NR0m047Ee6s

Added At: 13-06-25 21:19:20

Processed: No

Sentiment: Neutral

Categories: Health, Self-Help

Tags: rain, Pondicherry, daily routine, challenges

Summary

• The video is about a person's experience with the rain in Pondicherry.
• They share their daily routine and how the rain affects it.
• The speaker also talks about the challenges they faced due to the rain.

Transcript

ஹாய் கைஸ் உங்க எல்லோருக்கும் வணக்கம்
கடந்த ஒரு வாரமா பாண்டிச்சேரி முழுவதும்
மிதமான மழையா இருக்கு இந்த மழையால தினமும்
ஒரு மணி நேரம் மரங்களுக்கு தண்ணீர் ஊத்துற
வேலை இல்லை எனக்கு அதனால அந்த நேரத்துல
சரியான அளவெடுத்து இந்த மாசத்திற்கான மரம்
நடவு செய்ய குழி எடுக்க ஆரம்பிச்சுட்டேன்
இந்த குழி எடுக்குற இடம் எங்க ஊர்ல புதுசா
தார் ரோடு போடுவதற்காக பழைய தார் ரோட்டை
உடைச்சு இந்த இடத்துல கொட்டி
வச்சிருக்காங்க அதனால குழி எடுக்க ரொம்ப
கஷ்டமாதான் இருந்தது இருந்தாலும் இன்றைய
வழி நாளைய மகிழ்ச்சின்னு நினைச்சுக்கிட்டு
ஒரு வழியா கஷ்டப்பட்டு குழி எடுத்து
முடிச்சிட்டேன் என்கிட்ட நிறைய பேர்
மரங்கள் நடவு செய்ய ஏன் இவ்வளவு ஆழம் ஏன்
இவ்வளவு அகலம் அரை அடி ஆழம் போதாதா ஒரு
அடி ஆழம் போதாதான்னு கேக்குறீங்க அதுக்கு
சரியான காரணம் இருக்கு இந்த இடங்கள்
எல்லாமே வருங்கால குடியிருப்பு பகுதி இந்த
இடத்துல ஆழம் குறைவா எடுத்து மரங்களை
நடுவு செஞ்சா பிற்காலத்துல மரங்கள் நல்லா
வளர்ந்த பிறகு காத்து மழை புயல் இவைகளால
பாதிப்புக்குள்ளாகி மரங்கள் வேரோடு
சாய்ந்து ரோட்டுல போக்குவரத்துக்கு
இடைஞ்சல் வராம இருக்கவும் பக்கத்துல
இருக்கிற வீடுகளுக்கு பிரச்சனை வராம
இருக்கவும் தான் இந்த முறையில நான்
மரங்களை நடவு செய்றேன் என்னை
பொறுத்தவரைக்கும் எதையுமே ஏனோ தானோன்னு
செய்யக்கூடாது ஓகே கைஸ் திரும்பவும் இதே
இடத்துல ஒரு மரத்தோட சந்திக்கலாம்